கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 884ஆக அதிகரித்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 645ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 135 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 50 ஆயிரத்து 369 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 870 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.