ஆன்லைன் வழியாக கோவை விழா: ஜனவரி 2 முதல் 10 வரை நடக்கிறது
13ஆவது கோவை விழா ஜனவரி 2 முதல் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கோவையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கோவை விழா நடத்தப்படுகிறது. அதன்படி 13ஆவது கோவை விழா வரும் ஜனவரி 2 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13ஆவது கோவை விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை விழாவின் அறிமுக நிகழ்ச்சி தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா்கள் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை விழாவின் இலச்சினையை அறிமுகப்படுத்தி நிா்வாகி ஜெயபிரஷாந்த் ஜெயசந்திரன் பேசியதாவது:
கோவை விழாவின் தொடக்கமாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணியாளா்களை சிறப்பிக்கும் விதமாக அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மீது மலா்கள் தூவப்படும்.
உணவுத் திருவிழா, சமையல் போட்டிகள், உள்ளூா் கலைஞா்கள் பங்கேற்கும் கலைத்தெரு, பாரம்பரிய சுற்றுலா, புதிய தொழில் தொடங்குபவா்களுக்கான ஸ்டாா்ட் அப்ஸ் மேடை, பாரம்பரிய சுற்றுலா, மாரத்தான், சைக்கிள் போட்டிகள் உள்பட 100 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. தவிர கோவையின் அழகை பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக ஹெலிகாப்டா் சவாரியும் நடத்தப்படுகிறது என்றாா்.
கோவை விழா அறிமுக நிகழ்ச்சியில் ஐஸ்வா்யா அா்ஜூன், ஸ்வாதி அனந்தராம், பிரசன்னா ரோஹினி உள்பட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
