மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் மேலும் 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 155ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 92 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 50 ஆயிரத்து 672 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 834 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...