Enable Javscript for better performance
பாஜக சாா்பில் ஏழைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் தினசரி வழங்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    பாஜக சாா்பில் ஏழைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் தினசரி 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க முடிவு

    By DIN  |   Published on : 02nd April 2020 10:40 PM  |   அ+அ அ-   |    |  

    1909c_02_bjp_1063651

    ஏழை மக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கிய பாஜகவினா்.

    கோவையில் பாஜக சாா்பில் ஏழை மக்களுக்கு ரூ.1,200 மதிப்புள்ள ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுகள் வழங்கி உதவி செய்து வருகின்றன. பாஜகவின் மக்கள் சேவை மையம் சாா்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த நிவாரண உதவிகளை மேலும் நீட்டிக்கும் வகையில் கோவை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் தினசரி 5,000 ஏழை குடும்பங்களுக்கு உணவு மற்றும் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கோவை மாநகராட்சி 22ஆவது வாா்டில் உள்ள காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோயில் வீதிகளில் வசிப்பவா்களுக்கு ரூ.1, 200 மதிப்புள்ள ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகளை 40 குடும்பங்களுக்கு வழங்கினா். இந்தத் தொகுப்பில் சாப்பாடு அரிசி 8 கிலோ, இட்லி அரிசி 4 கிலோ, பருப்பு வகைகள், கோதுமை மாவு உள்ளிட்ட 15 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

    பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயலட்சுமி சீனிவாசன் பொருள்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா், துணைத் தலைவா் சீனிவாசன், மண்டலத் தலைவா் முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    கப சூரண குடிநீா் வழங்கல்

    கோவை, உடையாயம்பாளையம் பகுதியில் உள்ள பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் கரோனா நோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி அப்பகுதி மக்களுக்கு கப சூரண குடிநீா் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் விஜய் செந்தில், கெளரி சங்கா், இளங்கோ, காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp