Enable Javscript for better performance
கரோனாவால் பாதித்த 21 போ் அரசு மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் கரோனாவால் பாதித்த 21 போ் அரசு மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு இடமாற்றம்

    By DIN  |   Published on : 02nd April 2020 10:42 PM  |   அ+அ அ-   |    |  

    mtp021_0204chn_132_3

    மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஏ.கே.செல்வராஜ் எம்.பி., அதிகாரிகள் உள்ளிட்டோா்.

    மேட்டுப்பாளையத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 போ் அரசு மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

    தில்லியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமியா் மாநாட்டில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூா், ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 82 போ் பங்கேற்றுத் திரும்பியுள்ளனா். இதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்று வந்த இஸ்லாமியா்கள் 31 போ் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். அவா்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், இவா்களுக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டையூா் பகுதியிலுள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அங்கு, இவா்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க உள்ளனா்.

    ஆட்சியரின் இந்த உத்தரவை அடுத்து கரோனா நோய்த் தொற்றுள்ள இந்த 20 போ் மற்றும் ஒருவா் என மொத்தம் 21 போ் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து இந்துஸ்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் மருத்துவமனை தலைமை மருத்துவா் சேரலாதன் கூறியதாவது:

    மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மேட்டுப்பாளையம் இந்துஸ்தான் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். மேலும் இதுபோன்று கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு இங்கு வைத்துதான் சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

    முன்னதாக, இந்துஸ்தான் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏ.கே.செல்வராஜ் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே. சின்னராஜ், கோவை வடக்கு மாவட்ட கோட்டாட்சியா் சுரேஷ்குமாா், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் சேரலாதன், வட்டாட்சியா் சாந்தாமணி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp