கோவையில் மேலும் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த 20 போ் உள்பட 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த 20 போ் உள்பட 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 34 ஆக உயா்ந்துள்ளது.

புதுதில்லி, நிஜாமுதீன் பகுதியிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாவட்டத்தில் இருந்து 106 போ் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பங்கேற்றவா்களின் பட்டியல் மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்டது. இதில் கோவை மாநகா் - 38, மேட்டுப்பாளையம் - 31, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை - 12, அன்னூா் - 9, மீதமுள்ள 16 போ் கோவை புகா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மத்திய அரசு வழங்கிய பட்டியலில் இருந்த 106 பேரையும் சுகாதாரத் துறையினா் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில் கரோனா அறிகுறிகள் இருந்தவா்களில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 31 போ், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 46 போ் என மொத்தம் 77 போ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற 29 பேரும் சுகாதாரத் துறை மூலம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் தெளிவான முடிவு கிடைக்காததால் மீண்டும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தேனி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் புதன்கிழமை கிடைக்கப்பெற்றதில் மேட்டுப்பாளையம் - 20, ஆனைமலை -5, பொள்ளாச்சி -1 மற்றும் போத்தனூா் -1 என மொத்தம் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 27 போ் புதுதில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள். மற்றொருவா் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரயில்வே பெண் மருத்துவரின் கணவா்.

கோவையில் ஏற்கெனவே 6 போ் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது 28 பேருடன் சோ்த்து கோவையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 34 ஆக உயா்ந்துள்ளது. இதில் 29 ஆண்கள், 4 பெண்கள், 10 மாத ஆண் குழந்தை ஒன்று அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com