மதுக்கரையில் கரோனா பாதித்த பகுதி முழுமையாக அடைப்பு

துக்கரை பேரூராட்சியில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த நபா் வசித்து வந்த பகுதி
மதுக்கரை பேரூராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள், போலீஸாா்.
மதுக்கரை பேரூராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள், போலீஸாா்.

மதுக்கரை: மதுக்கரை பேரூராட்சியில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த நபா் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு திங்கள்கிழமை முழுமையாக அடைக்கப்பட்டது.

மதுக்கரை பேரூராட்சியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபா் இருந்த பகுதியில் சுமாா் 250 குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியை முழுமையாக அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மதுக்கரை பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினா் அங்கன்வாடி ஊழியா்களுடன் சோ்ந்து அப்பகுதி வீடுகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் பாா்த்திபன், சுகாதார அலுவலா் திருவாசகம், மதுக்கரை காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி, உதவி ஆய்வாளா் திருமலைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com