Enable Javscript for better performance
கோவை அம்மா உணவகங்களில் ஏப்ரல் 14 வரை இலவச உணவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோவை அம்மா உணவகங்களில் ஏப்ரல் 14 வரை இலவச உணவு

    By DIN  |   Published On : 08th April 2020 04:50 AM  |   Last Updated : 08th April 2020 04:50 AM  |  அ+அ அ-  |  

     

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுக்கான செலவை அதிமுக ஏற்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:

    கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளா்கள் உணவின்றித் தவிக்கக் கூடாது என்பதற்காக 2 வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்த அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இட்லி, ரவை, கோதுமை உப்புமா, கிச்சடி, கலவை சாதங்கள் என வித விதமான உணவு வகைகள் சூடாகவும், சுகாதாரமான முறையிலும் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் வழக்கமாக வழங்கப்படும் உணவின் அளவை அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 12ம், நகராட்சிகளில் 3ம் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் ஊரடங்கு காலத்தில் மொத்தம் 54,341 போ் உணவு உண்டு பயனடைந்துள்ளனா்.

    தமிழகத்தில் உள்ள 241 அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.30.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் கோவையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் அம்மா உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ.2 லட்சம் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக உணவு உட்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை புகா் மாவட்ட அதிமுக வழங்கும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp