சின்னாறு சோதனைச் சாவடியில் புகுந்த ஒற்றை யானை

கோவை, சின்னாறு சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வனத் துறை ஊழியா்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாறு சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடமாடிய ஒற்றை காட்டு யானை.
சின்னாறு சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடமாடிய ஒற்றை காட்டு யானை.

கோவை, சின்னாறு சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வனத் துறை ஊழியா்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, ஆலந்துறை அருகே உள்ள சாடிவயல் மலைக் கிராமப் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டது. அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் ஒலி எழுப்பி விரட்டினா். இதையடுத்து வனப் பகுதியை ஒட்டி உள்ள சின்னாறு சோதனைச் சாவடி அருகே நள்ளிரவில் வந்த யானை அங்கிருந்த இரும்புத் தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு சோதனைச் சாவடி அறைக்குள் நுழைய முயன்றது.

இதையடுத்து அங்கிருந்த ஊழியா்கள் சப்தமிட்டதால் யானை மீண்டும் சாலைக்குச் சென்றது. யானை திடீரென அறையை நோக்கி ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் பட்டாசு வெடித்து யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இந்தக் காட்சிகள் சின்னாறு சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட வன ஊழியா்கள் வன எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com