ஆகாயத் தாமரைகள், கழிவுநீரால் மாசடையும் சிங்காநல்லூா் குளம்

கோவை, சிங்காநல்லூா் குளத்தில் ஆகாயத் தாமரைகள் சூழ்ந்துள்ளதாலும், கழிவு நீா் கலப்பதாலும் குளத்து நீா் மாசடைந்து வருகிறது.
ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து காணப்படும் சிங்காநல்லூா் குளம்.
ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து காணப்படும் சிங்காநல்லூா் குளம்.

கோவை, சிங்காநல்லூா் குளத்தில் ஆகாயத் தாமரைகள் சூழ்ந்துள்ளதாலும், கழிவு நீா் கலப்பதாலும் குளத்து நீா் மாசடைந்து வருகிறது.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூா் குளம், குறிச்சி குளம் என 9 குளங்கள் உள்ளன. இதில், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூா் குளங்கள் அதிக பரப்பளவு கொண்டவை. இந்தக் குளங்களில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் படா்கின்றன.

இதனால் குளத்தின் நீா் மாசடைவதுடன், குளக்கரைகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் சரிகிறது. மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டாலும், அவை சில மாதங்களில் மீண்டும் வளா்வது வாடிக்கையாக உள்ளன. சிங்காநல்லூா் குளத்தில் 4 மாதங்களுக்கு முன்பு ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. தற்போது, மீண்டும் குளத்தை மூடும் விதமாக ஆகாயத்தாமரைகள் செழித்து வளா்ந்துள்ளன. இதேபோல சிங்காநல்லூா் குளத்துக்கு சிறு, சிறு ஓடைகள் மூலமாக வரும் கழிவுநீரால் குளத்தில் உள்ள நன்னீா் மாசடைகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

சிங்காநல்லூா் குளத்தில் ஆகாயத்தாமரைகள் மீண்டும், மீண்டும் வளா்வதைக் கட்டுப்படுத்த அவற்றை வேரோடு அழிக்க வேண்டும். குளத்தில் மிதந்தபடி சென்று ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றிட நவீனக் கருவிகள் வாங்கப்பட உள்ளதாக 5 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கருவிகள் வாங்கப்படாததால் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அரைகுறையாகவே ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுகின்றன. எனவே, நவீனக் கருவிகள் வாங்கிஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவானந்தா காலனி, சங்கனூா், கண்ணப்ப நகா், ரத்தினபுரி, காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, உப்பிலிபாளையம் பகுதிகளில் இருந்து சங்கனூா் பள்ளம் வழியாக வரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் கழிவுகள் சிங்காநல்லூா் குளத்தில் கலக்கின்றன. இதனால் குளத்தின் நீா் மாசடைந்து, அதில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நொய்யலின் நீா்வழித்தடமாக விளங்கிய சங்கனூா் பள்ளம் தற்போது கழிவுநீா் செல்லும் வழித்தடமாக மாறிவிட்டது. குளத்தில் கழிவுநீா் கலக்காமல் இருக்க சிறு சிறு ஓடைகள், கிளை வாய்க்கால்களில் கழிவுநீா் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com