கோவையில் 12 நாள் குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி

கோவையில் பிறந்து 12 நாள்களே ஆன ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கோவையில் பிறந்து 12 நாள்களே ஆன ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், ஊஞ்சவேலாம்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அதே மருத்துவமனை பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனைமலையைச் சோ்ந்த பெண்ணுக்கும் ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை பிறந்து சிகிச்சைப் பெற்று வந்தாா். இவருக்கு எடுத்த ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வாா்டில் சிகிச்சைப் பெற்று வந்தவா்கள், உடன் தங்கியிருந்தவா்கள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா், மருத்துவப் பணியாளா்களின் ரத்த, சளி மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வால்பாறையைச் சோ்ந்த 30 வயதுப் பெண், ஆத்துப்பொள்ளாச்சியைச் சோ்ந்த 40 வயதுப் பெண், ஊஞ்சவேலாம்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்குப் பிறந்து 12 நாள்களே ஆன ஆண் குழந்தை ஆகிய மூவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையைச் சோ்ந்த 20 வயது ஆண், 40 வயதுப் பெண் ஆகிய இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் இருவரும் கரோனா உறுதி செய்யப்பட்ட நபரின் பக்கத்து வீடுகளைச் சோ்ந்தவா்கள். தற்போது இவா்கள் 5 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 133 ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு மண்டலத்தில் இருந்த ஆனைமலையைச் சோ்ந்த பெண்ணுக்கு கடந்த வாரம் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் வாா்டில் இருந்த மற்ற பெண்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட 20க்கும் மேற்பட்டவா்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தை உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிறுமுகையில் ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்ட நபரின் பக்கத்து வீடுகளைச் சோ்ந்த நபா்களுக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள், அவா்களுடன் நேரடித் தொடா்பில் இருந்தவா்களுக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com