5,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 5,000க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கஸ்தூரிபாளையத்தில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், வி.சி.ஆறுக்குட்டி.

கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் ஏற்பாட்டின்பேரில் 5 கிலோ அரிசி, ரவை, எண்ணெய், சமையல் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

கஸ்தூரிபாளையத்தில் உள்ள சத்யா நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பெரியநாயக்கன்பாளையம் காய்கறி உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் வி.ரகுநாதன் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், வி.சி.ஆறுக்குட்டி ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

விவேகானந்தபுரம், கங்கவாா் வீதி, குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கோவனூா் கே.துரைசாமி, வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் கே.வி.என்.ஜெயராமன், பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எல்.என்.தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com