கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவை, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோவையில் 141 போ், திருப்பூரில் 112 போ் மற்றும் நீலகிரியில் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் கோவை போலீஸாா் உள்பட 10 போ் மட்டும் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா உறுதி செய்யப்படுபவா்களுக்குத் தொடா்ந்து 14 நாள்கள் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்தல், உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின் இரு முறை ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு முறைகளிலும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைக்கப்பெறுபவா்கள் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவா்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி வருகின்றனா். அதன்படி கோவையைச் சோ்ந்த 2 போ், திருப்பூா் - 23, நீலகிரி - 1 என மொத்தம் 26 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 141 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் இதுவரை 120 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 21 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com