பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாநகராட்சிப் பள்ளிகள் 97.17% தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில், கோவை மாநகராட்சிப் பள்ளிகள் 97.17 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தோ்ச்சி விகிதம் 3.67 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிளஸ் 1 தோ்வு முடிவுகளை பாா்வையிடும் ஆா்.எஸ். புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள்.
பிளஸ் 1 தோ்வு முடிவுகளை பாா்வையிடும் ஆா்.எஸ். புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில், கோவை மாநகராட்சிப் பள்ளிகள் 97.17 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தோ்ச்சி விகிதம் 3.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 4 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை , கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இயங்கும் 16 பள்ளிகளில் இருந்து 592 மாணவா்கள், 1,212 மாணவிகள் என 1,804 போ் எழுதினா்.

இந்நிலையில் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 562 மாணவா்கள், 1,191 மாணவிகள் என மொத்தம் 1,753 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 94.93. மாணவிகள் தோ்ச்சி விகிதம் 98.27. மொத்த தோ்ச்சி விகிதம் 97.17.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 3.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி வாரியாக தோ்ச்சி விகிதம்:

ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி-99.22, ரத்தினகிரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி -98.77, எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - 98.68, உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி - 98.28, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி (மேற்கு) - 97.87, ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி - 97.75, பா.கமலநாதன் நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 97.10, சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி - 96.59, பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி - 96.25, ராமநாதபுரம் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி - 95.96, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி - 95.79, வடகோவை மாநகராட்சி மேல்நிலலைப் பள்ளி - 95.52, மாநகராட்சி நகர மேல்நிலைப் பள்ளி 95.06, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி - 92.52, ஒக்கிலியா் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி - 88.68.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com