முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ஆடிப்பெருக்கு: நொய்யல் நதிக்கரையில் பொதுமக்கள் வழிபாடு
By DIN | Published On : 03rd August 2020 06:15 AM | Last Updated : 03rd August 2020 06:15 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கையொட்டி கோவையில் பேரூா் நொய்யல் நதிக்கரையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா்.
தமிழகத்தில் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது கிராமங்களில் மக்கள் நீா்நிலைகளுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் நீா்நிலைகளில் பொங்கி வரும் புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கையொட்டி கோவை அருகேயுள்ள பேரூரில் நொய்யல் நதிக்கரையில் பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா்.
பேரூா் படித்துறை அருகே நொய்யல் ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீா் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் பேரூா் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீா் வரத்து இல்லை. இருந்தும் ஆடிப்பெருக்கையொட்டி கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் படையல் வைத்து, தீபம் ஏற்றி வழிபட்டனா்.
பொது முடக்கத்தால் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்று இரண்டு பேராக வந்தே வழிபட்டு சென்றனா்.