முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ரூ.1.75 கோடியில் சி.டி. ஸ்கேன் கருவி
By DIN | Published On : 03rd August 2020 06:14 AM | Last Updated : 03rd August 2020 06:14 AM | அ+அ அ- |

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரூ. 1.75 கோடியில் புதிதாக அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரத்யேக கரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கோவை, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களுக்கு சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பு கண்டறியப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு நுரையீரல் பாதிப்பினால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாகி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
தற்போது தினமும் 20க்கும் மேற்பட்டவா்களுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஒரு சி.டி. ஸ்கேன் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் ரூ.1.75 கோடி மதிப்பில் அதிநவீன சி.டி ஸ்கேன் கருவி தற்போது கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவா்களை ஸ்கேன் செய்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனா். அதன் பின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 1,700க்கும் மேற்பட்டவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டவா்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் நோயாளிகளுக்கு விரைவாக பரிசோதனை செய்ய முடியும் என்றாா்.