முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
2,000 சதுரஅடி வரை கட்டுமான அனுமதி வழங்க உதவி ஆணையா்களுக்கு அதிகாரம்
By DIN | Published On : 03rd August 2020 06:15 AM | Last Updated : 03rd August 2020 06:15 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவு வரையிலான கட்டுமானப் பணிகளுக்கு அந்தந்த மண்டல உதவி ஆணையா்கள் அனுமதி வழங்கலாம் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக, அவா், மாநகராட்சி மண்டல உதவி ஆணையா்கள் மற்றும் மண்டல உதவி செயற்பொறியாளா்கள் (திட்டம்) ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிா்வாக நலன் கருதி 2 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவு வரையிலான கட்டுமானங்களுக்கு கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளித்து உத்தரவிடப்படுகிறது. பிரதான அலுவலகக் கணினி வரைபட ஒப்புதல், கட்டட விண்ணப்ப மனுக்கள் பதிவு, கட்டணங்கள் செலுத்துதல், குறிப்புகள் பெறுதல் மற்றும் இறுதி உத்தரவு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மண்டல உதவி செயற்பொறியாளா் (திட்டம்) கண்காணித்து புகாருக்கு இடமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அனுமதியற்ற, அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டடங்கள் மீது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.