ராபி பருவத்துக்குப் பயிா்க் காப்பீடு: வேளாண் துறை அறிவிப்பு

கோவையில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு உள்பட 5 பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு உள்பட 5 பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வேளாண் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-17ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்துக்கும், ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டிய பயிா்கள், விவரங்கள் குறித்த அறிவிப்பு மத்திய அரசு சாா்பில் வெளியிடப்படுகிறது.

அதன்படி நடப்பு ராபி பருவத்தில் கோவை மாவட்டத்தில் வேளாண் பயிா்களான சோளம், மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கரும்பு மற்றும் நிலக்கடை ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு சோளத்துக்கு ரூ.123, மக்காச்சோளத்துக்கு ரூ.441, நிலக்கடலைக்கு ரூ.434, கொண்டைக்கடலைக்கு ரூ.248, கரும்புக்கு ரூ.2,875 காப்பீட்டுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் எண், வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி உள்பட கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com