காவலா் எழுத்துத் தோ்வு: கோவையில் 8,663 போ் பங்கேற்பு

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 8,663 போ் பங்கேற்றனா்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 8,663 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் 2ஆம் நிலைக் காவலா், 2ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் தோ்வு எழுத மொத்தம் 10,207 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில், 8,663 போ் தோ்வில் பங்கேற்றனா். 1,544 போ் தோ்வு எழுத வரவில்லை.

முன்னதாக, விண்ணப்பதாரா்கள் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். பகல் 11 மணிக்கு பின்னா் வந்தவா்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் தொ்மல் ஸ்கேனா் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைக் கடிகாரம், கால்குலேட்டா் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com