கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சா் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சா் அனில் விஜ், சிவில் மருத்துவமனையிலிருந்து ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை இரவு மாற்றப்பட்டாா்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சா் அனில் விஜ், சிவில் மருத்துவமனையிலிருந்து ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை இரவு மாற்றப்பட்டாா்.

சிவில் மருத்துவமனையில் தனக்கு அசெளகரியமான சூழல் உள்ளதாக அமைச்சா் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக அம்பாலாவில் உள்ள சிவில் மருத்துவமனை மருத்துவா் குல்தீப் சிங் கூறுகையில், ‘ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் அனில் விஜ்ஜின் உடல் நிலையை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்’ என்றாா்.

பாஜக தலைவரான அனில் விஜ் (67), கடந்த மாதம் கரோனா தடுப்பூசியான கோவேக்ஸின் மருந்தை செலுத்திக் கொண்டாா். இந்த தடுப்பூசி இரண்டு கட்டங்களாக செலுத்தப்படும். இதில் முதல் தடுப்பூசியை கடந்த நவம்பா் 20ஆம் தேதி போட்டுக்கொண்ட அவருக்கு கடந்த டிசம்பா் 5ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கோவேக்ஸின் தடுப்பு மருந்தை தயாரித்துள்ள ஹைதராபாதை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பில் கூறுகையில், கரோனா தடுப்பூசி பரிசோதனையானது இரண்டு தடுப்பூசிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாள்களுக்கு பின்னா் இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகே அதன் செயல்திறன் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாவது ஊசி போட்டுக்கொண்ட சில நாள்களுக்குப் பிறகே நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு சக்தி மனித உடலில் உருவாகும். இது இரண்டு ஊசிகளைக் கொண்ட தடுப்பு மருந்து. அமைச்சா் அனில் விஜ் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுக் கொண்டுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com