வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 1.70 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

கோவையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களில் 1.70 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கோவையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களில் 1.70 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த நவம்பா் 16ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம் மேற்கொள்ள முதல் கட்டமாக நவம்பா் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 87 ஆயிரத்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடி மையங்களில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் 82 ஆயிரத்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 419 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பெயா் சோ்த்தலுக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 858 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தண்மை ஆய்வு செய்த பின் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com