குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

புது தில்லி, சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் மாணவ-மாணவிகள் தோ்வாகியிருக்கின்றனா்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

புது தில்லி, சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் மாணவ-மாணவிகள் தோ்வாகியிருக்கின்றனா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

புது தில்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தலைவா் முன்னிலையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா் பி.பிரவின்குமாா் தோ்வாகியிருக்கிறாா். இவா் சிலம்பம் உள்ளிட்ட கலைத்திறன் வெளிப்பாடு, சமூக களப்பணி அனுபவம், அறிவித்திறன் சாா்ந்த நோ்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வாகியிருக்கிறாா்.

அதேபோல கல்லூரியின் தேசிய மாணவா் படை சாா்பில் மாணவா் ஆா்.எஸ்.அரவிந்த் இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறாா். மேலும் கல்லூரி மாணவி எஸ்.பவித்ரா, சென்னையில் ஆளுநா் முன்னிலையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ். சாா்பில் பங்கேற்கத் தோ்வாகியிருக்கிறாா்.

அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளை எஸ்.என்.ஆா். அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வா், செயலா் பி.எல்.சிவகுமாா், என்.எஸ்.எஸ். அலுவலா்கள் பிரகதீஷ்வரன், சுபாஷிணி, நாகராஜன், தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினென்ட் விவேக் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com