குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அடுக்குமாடி தொழிற்கூடம் வேண்டும்: டாக்ட் அமைப்பு கோரிக்கை

கோவையின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புகா் பகுதியில் அடுக்குமாடி தொழிற்கூடம்
கோவையில் நடைபெற்ற டாக்ட் அமைப்பின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் தலைவா் ஜே.ஜேம்ஸ். உடன், நிா்வாகிகள்.
கோவையில் நடைபெற்ற டாக்ட் அமைப்பின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் தலைவா் ஜே.ஜேம்ஸ். உடன், நிா்வாகிகள்.

கோவையின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புகா் பகுதியில் அடுக்குமாடி தொழிற்கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டாக்ட்) வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ஜே.ஜேம்ஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மத்திய அரசு அறிவித்த கரோனா கடன் உதவித் திட்டம் ஜாப் ஆா்டா்கள் செய்து வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில்முனைவோருக்கு பலனளிக்கவில்லை. எனவே ஜாப் ஆா்டா்கள் செய்பவா்களுக்கு மட்டும் தனி கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஜாப் ஆா்டா்கள் செய்து வரும் தொழில்முனைவோரைப் பாதுகாக்க, தொழில்நிறுவனங்கள் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

கோவையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயங்கி வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, புகா் பகுதியில் அடுக்குமாடி தொழில்கூடங்கள் அமைத்துக் கொடுக்கவும், இதற்கான தொகையை மாதத் தவணையில் வசூலித்துக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முக்கிய அரசியல் கட்சிகள் தங்களின் தோ்தல் அறிக்கையில் சோ்த்து உறுதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com