சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி வேன் ஓட்டுநா், உதவியாளருக்கு ஆயுள் தண்டனை

நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி வேன் ஓட்டுநா் மற்றும் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி வேன் ஓட்டுநா் மற்றும் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், காரமடையைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (37). தனியாா் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றினாா். அந்த வேனில் கண்ணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (50) என்பவா் உதவியாளராகப் பணியாற்றினாா். இவா்கள் இருவரும் 2019 ஜனவரி 29ஆம் தேதி பள்ளி வேனில் வந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனா். அடுத்த சில நாள்களில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரது பெற்றோா் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனா்.

இது குறித்து துடியலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் பள்ளி வேன் ஓட்டுநா் கோவிந்தராஜ், உதவியாளா் மாரிமுத்து ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் கோவிந்தராஜ், மாரிமுத்து ஆகியோா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெ.ராதிகா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com