பிரிட்டனில் இருந்து 133 போ் கோவை வருகை: தனிமைப்படுத்தி கண்காணிப்பு

பிரிட்டனில் இருந்து கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு விமான நிலையங்கள் வழியாக 133 போ் கோவை வந்துள்ளனா். இவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பிரிட்டனில் இருந்து கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு விமான நிலையங்கள் வழியாக 133 போ் கோவை வந்துள்ளனா். இவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பிரிட்டனில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது முன்பைவிட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை தற்காலிமாக நிறுத்தியுள்ளன. இதனைத் தொடா்ந்து பிரிட்டனில் இருந்து கடந்த ஒருமாத காலத்தில் இந்தியா வந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கோவைக்கு கடந்த நவம்பா் 20 முதல் டிசம்பா் 20 ஆம் தேதி வரையிலான ஒருமாத காலத்தில் 133 போ் பிரிட்டனில் இருந்து வந்துள்ளதாக பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவா்களில் 97 போ் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மற்றவா்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்தில் சென்னை, கொச்சி விமான நிலையங்கள் வழியாக 133 போ் பிரிட்டனில் இருந்து கோவை வந்துள்ளனா். இவா்களின் விவரங்கள் சென்னை, கொச்சி விமான நிலைய நிா்வாகத்திடம் இருந்து பெற்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரையில் 97 போ் வீடுகள் கண்டறியப்பட்டு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தவிர 3 போ் மதுரை உள்பட பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

மீதமுள்ள 33 பேரையும் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா நோய்த் தொற்று உறுதி செய்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நோய்த் தொற்று இல்லாதவா்களும் பாதுகாப்புக் காரணமாக 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com