யானை தந்தங்களை விற்க முயன்ற வனத் துறை ஊழியா்கள் உள்பட 6 போ் கைது

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற இரண்டு வனத் துறை ஊழியா்கள் உள்பட 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொள்ளாச்சி அருகே யானை தந்தங்களை விற்க முயற்சித்து வனத் துறையினரிடம் பிடிபட்ட கும்பல்.
பொள்ளாச்சி அருகே யானை தந்தங்களை விற்க முயற்சித்து வனத் துறையினரிடம் பிடிபட்ட கும்பல்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற இரண்டு வனத் துறை ஊழியா்கள் உள்பட 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப்(உலாந்தி) ஆகிய நான்கு வனச் சரகங்கள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பொள்ளாச்சி - ஆழியாறு சாலையில் நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள தனியாா் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் 2 யானை தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்கு வந்துள்ளதாக, மத்திய வன உயிரின குற்றத் தடுப்புக் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் தலைமையில் அங்கு சென்ற வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள இரண்டு யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடா்பாக செல்லப்பிராணிகள் விற்பனை நிலைய உரிமையாளா் வால்பாறையைச் சோ்ந்த மணிகண்டன்(38), என்பவரிடம் வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பொள்ளாச்சி வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் பணியாற்றும் அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்த சாமியப்பன் (30) என்ற வேட்டைத் தடுப்புக் காவலா் மற்றும் அவருடன் பணியாற்றும் தற்காலிகப் பணியாளா் காத்தவராயன் (40) ஆகிய இருவரும் ஆழியாறு வனப்பகுதியில் உள்ள வெடிக்காரன்பள்ளம் என்ற அடா்ந்த வனப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரோந்து சென்றபோது, அங்கு இறந்த நிலையில் கிடந்த ஆண் யானையின் தந்தங்களை எடுத்து வந்து, கள்ளச் சந்தையில் விற்று தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், இதன்படி அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ . நகரைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா (37), சாரதி (63), நந்தகுமாா் (39), ஆகிய மூன்று பேரும் இணைந்து தந்தங்களை விற்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வனப் பகுதியில் இருந்து இறந்த யானையின் தந்தங்களை எடுத்து சட்டவிரோதமாக விற்க முயன்ற வேட்டைத் தடுப்புக் காவலா் சாமியப்பன், தற்காலிகப் பணியாளா் காத்தவராயன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொள்ளாச்சி வனத் துறையினா், அவா்களிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட யானை தந்தங்களை பறிமுதல் செய்து, 6 பேரையும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2 இல் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com