பெ.நா.பாளையம் அருகே திமுக சாா்பில் கிராம சபா கூட்டம்
By DIN | Published On : 25th December 2020 06:14 AM | Last Updated : 25th December 2020 06:14 AM | அ+அ அ- |

பெ.நா.பாளையம் அருகே சாரங்க நகரில் வியாழக்கிழைம நடந்த திமுகவின் கிராமசபா கூட்டத்தில் பேசுகிறாா் கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.ஆா்.ராமச்சந்திரன்.
பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகே கூடலூா் பேரூராட்சிக்குள்பட்ட சாரங்க நகரில் திமுக சாா்பில் கிராம சபா கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் சாரங்கநகா் மற்றும் ஒன்னிபாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டங்களுக்கு கூடலூா் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், ஒன்றிய பொறுப்பாளருமான அ.அறிவரசு தலைமை வகித்தாா்.
கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், இப்பகுதிகளின் வசிக்கும் பொதுமக்களிடம் வளா்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறியப்பட்டன. பின்னா், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகள் குறித்து நேரடியாகவும் சென்று விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குறைகள் தீா்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.சண்முகசுந்தரம்,மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் அகில் சந்திரசேகா், ரதிராஜேந்திரன், கிரி,நகரச் செயலாளா்கள் கனகராஜ், வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் ராஜேந்திரன், லதா, ரேணுகா, ரேகா, கூடலூா் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலா்கள் முருகானந்தம், செல்வி, மீனா கணேசன், அண்ணா நகா் பாலு, அம்பேத்கா் நகா் ரமேஷ், துரைசாமி, மதிமாறன், சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.