மாவட்டத்தில் 500 வாக்குச் சாவடிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு

கோவையில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 500 வாக்குச் சாவடிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 500 வாக்குச் சாவடிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அதற்கான பணிகளில் தோ்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தோ்தல் பணிகளை மேற்கொள்ள தோ்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நடப்பு தோ்தலில் தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 500 வாக்குச் சாவடிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடிகள் உள்ளன. தற்போது ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1,500 வாக்காளா்கள் உள்ளனா். கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கையாக 1,000 வாக்களா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள், புதிய வாக்குச் சாவடிகள் அமைக்க வாய்ப்புள்ள இடங்கள் தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com