Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

    இந்த உதவித் தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போா் பட்டியலில் இருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளி மனுதாரா்களுக்கு பதிவு மூப்பு ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

    இவா்களில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டி டிசம்பா் 31ஆம் தேதியன்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடினா்கள் 45 வயதுக்கு உள்பட்டராகவும், மற்றவா்கள் 40 வயதுக்கு உள்பட்டவா்களாகவும் இருத்தல் வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரா்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பை தமிழகத்தில் முடித்து 15 ஆண்டுகள் இங்கேயே வசித்தவராக இருத்தல் வேண்டும்.

    தொலைதூரம், அஞ்சல்வழிக் கல்வியில் படிப்பவா்களும் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடா்ந்து புதுப்பித்து வர வேண்டும்.

    உதவித் தொகை பெறத் தகுதியானவா்கள் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.  இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai