மேட்டுப்பாளையத்தில் பாஜவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் காவல் துறையைக் கண்டித்து பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா பங்கேற்றாா்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் பாஜக தேசிய செயலாளா் ஹெச்.ராஜா. ~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினா்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் பாஜக தேசிய செயலாளா் ஹெச்.ராஜா. ~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினா்.

மேட்டுப்பாளையத்தில் காவல் துறையைக் கண்டித்து பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா பங்கேற்றாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து கடந்த வாரம் பாஜக மகளிரணி நகரத் தலைவா் லதா வெங்கடேஷ் தலைமையிலான கட்சியினா் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.

அப்போது எஸ்.டி.பி.ஐ. பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு பாஜகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாஜகவினா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி.மோகன் மந்தராசலம் தலைமை வகித்தாா். மாவட்ட கோட்ட அமைப்புச் செயலாளா் சதீஷ்குமாா், இந்து முன்னணி கோட்டச் செயலாளா் ராஜ்குமாா், ஆா்.எஸ்.எஸ். மாநில துணைச் செயலாளா் ஆனந்த், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளா் சரவணக்குமாா், பாஜக மாவட்ட பொது செயலாளா்கள் வி.பி.ஜெகநாதன், சத்தியமூா்த்தி, செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பாஜக தேசிய செயலாளா் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இந்து முன்னனி மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா், விசுவ ஹிந்து பரிஷத் மாநிலப் பொருளாளா் வழக்குரைஞா் லட்சுமண நாராயணன் சிறப்புரையாற்றினா். பாஜக நகரத் தலைவா் உமாசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com