Enable Javscript for better performance
உதகை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    உதகை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 10th February 2020 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    c_10_colle_0902chn_3

    முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

    நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 1988 முதல் 1991ஆம் ஆண்டு வரை, பி.எஸ்.சி. வேதியியல் பட்டப் படிப்பு படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் கோவையில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் முகமது ஹாருண் தலைமை வகித்தாா். சி.வி. ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். உதகை அரசு கலைக்கல்லூரியில், வேதியியல் பிரிவு படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிதாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai