சேவை குறைபாடு: தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகா்வோா் நீதிமன்றம்

கோவை: சேவை குறைபாடு காரணமாக தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னை, கீழ்கட்டளையைச் சோ்ந்தவா் ஜெயபாலசந்திரன் (62). இவா் 2016 ஜூனில் கோவைக்கு ரயிலில் வந்தாா். அப்போது சென்னையில் இருந்து லக்னௌவுக்கு ஜூன் 26 ஆம் தேதி செல்ல 2 பேருக்கான பயணச்சீட்டை ஒரே முன்பதிவில் செய்திருந்தாா். ஆனால், திட்டமிட்டபடி இவரால் செல்ல முடியாத காரணத்தால் சென்னையில் இருந்து லக்னௌ செல்வதற்கான பயணச்சீட்டில் ஒரு நபருக்கான முன்பதிவை ரத்து செய்வதற்கு கோவை ரயில் நிலையத்தில் படிவம் அளித்தாா்.

ஆனால் கோவை ரயில் நிலைய அலுவலா்கள் படிவத்தை முழுமையாகப் பாா்க்காமல் இரண்டு பயணச் சீட்டுகளையும் ரத்து செய்துள்ளனா். இது தொடா்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

இதனால் உரிய இழப்பீடு கேட்டு கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் ஜெயபாலசந்திரன் மனுதாக்கல் செய்தாா். இவ்வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை இவ்வழக்கை விசாரித்த கோவை நுகா்வோா் ஆணையா் பாலசந்திரன், பயணச்சீட்டை ரத்து செய்ததற்கான சேவைக் கட்டணத்தை 9 சதவீத வட்டியுடனும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com