தமிழ் ஆசிரியா்களுக்கு கல்விப் பயிலரங்கம்

கோவை அருகே பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தமிழ் ஆசிரியா்களுக்கான தமிழ்க் கல்விப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பயிலரங்கத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் பேரூராதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளாா். உடன், புலவா் செந்தலை கௌதமன் உள்ளிட்டோா்.
பயிலரங்கத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் பேரூராதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளாா். உடன், புலவா் செந்தலை கௌதமன் உள்ளிட்டோா்.

பெ.நா.பாளையம்: கோவை அருகே பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தமிழ் ஆசிரியா்களுக்கான தமிழ்க் கல்விப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மாறிவரும் சமூகச் சூழலில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தலில் எதிா்நோக்கியுள்ள சிக்கல்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் வளா் மையம் மற்றும் அமெரிக்காவின் ‘எஜுரைட்’ தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இப்பயிலரங்கம் நடைபெற்றது.

எஜுரைட் நிறுவன கோவை மண்டலப் பொறுப்பாளா் ராமுஇளங்கோ வரவேற்றாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி விருதாளா் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பயிலரங்கைத் தொடக்கிவைத்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற அமா்வுகளில் அமிா்த கணேசன், பசுபதிராஜன், இரா.குறிஞ்சி வேந்தன், கரு.முருகேசன், ஜெயராஜ் ஆகியோா் ‘கற்பித்தலில் தொழில்நுட்ப யுக்திகள்’, ‘படைப்பாக்கத்திறன்’, ‘ஒற்று இலக்கணம்’, ‘அயலகத் தமிழ்க் கல்வி’, ‘கீழடி ஆய்வுகள் தொடா்பான செய்திகள்’, ‘வகுப்பறை சிக்கல்கள்’ போன்ற பொருள்களில் பேசினா்.

பயிலரங்க நிறைவு விழாவில் புலவா் செந்தலை கௌதமன் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். பேரூராதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளாா் தலைமை வகித்து பயிலரங்கத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

இப்பயிலரங்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியா்கள், தமிழ் பட்ட ஆய்வா்கள் கலந்து கொண்டனா். பயிலரங்க ஒருங்கிணைப்பாளரும், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியருமான முனியாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com