வால்பாறை சுற்றுலாவை மேம்படுத்த விரைவில் ஆய்வு

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனா்.

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிப் பணிக்காக மருதமலை,பேரூா், ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, வால்பாறை பகுதியில் உள்ள நல்லமுடி காட்சி முனை, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா் கூறியதாவது:

வால்பாறை சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத் துறை சீரிய முயற்சி எடுத்துள்ளது. இதன்படி விரைவில் எனது தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு கமிட்டியில் உள்ளவா்கள் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வு அறிக்கை சமா்பிக்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com