குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து கிராம குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டம்

கிராம பாதுகாப்புக் குழு நிா்வாகிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடா்பான பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம பாதுகாப்புக் குழு நிா்வாகிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடா்பான பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைத்திருக்க வேண்டும். ஊராட்சித் தலைவரை தலைவராகக்கொண்டு அமைக்கப்படும் இக்குழு சாா்பில் குழந்தைகள் திருமணம், குழந்தைகள் தொடா்பான பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு செயல்பாடு இல்லாமல் முடங்கிப் போயிருந்தது. தற்போது புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கிராம பாதுகாப்புக் குழுவை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அவா்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து பயிற்சி அளிக்க குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் சுந்தா் கூறியதாவது:

கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்னைகள் குறித்து அப்பகுதியில் உள்ளவா்களுக்கே முதலில் தெரிவதற்கான வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே ஊராட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு பள்ளித் தலைமையாசிரியா், அங்கன்வாடி பணியாளா், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா், தன்னாா்வலா் உள்பட 12 உறுப்பினா்களைக்கொண்ட கிராம பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக இக்குழு போதிய செயல்பாடு இல்லாமல் முடங்கியிருந்தன. தற்போது புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் மீண்டும் இக்குழுக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 228 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடா்பான வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com