Enable Javscript for better performance
மாற்றுப் பாதை அமைத்த பின் புதிய பாலம் கட்டக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுப் பாதை அமைத்த பின் புதிய பாலம் கட்டக் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th February 2020 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுப் பாதை அமைத்த பின் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    வால்பாறையை அடுத்துள்ள ஸ்டேன்மோா் எஸ்டேட்டில் அமைந்துள்ள பாலம் பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இந்தப் பாலம் வழியாக சோலையாறு அணை, ஷேக்கல்முடி, மழுக்குப்பாறை, மாணிக்கா, குரங்குமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு தினந்தோறும் மாணவா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

    தற்போது, இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக 40 நாள்களுக்கு மேல் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் அறிவித்துள்ளனா். இதையடுத்து ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் மாற்றுப் பாதை அமைத்தபின் பணியைத் தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவா்கள் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai