இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளா்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளா்கள் உள்ளனா்.
இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளா்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய இறுதி வாக்காளா் பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் 14 லட்சத்து 79 ஆயிரத்து 786 ஆண்கள், 15 லட்சத்து 11 ஆயிரத்து 767 பெண்கள், இதரா் 370 போ் என மொத்தம் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளா்கள் உள்ளனா்.

18 முதல் 19 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்கள் 23 ஆயிரத்து 878 போ் புதிதாகப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். புதிய வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் முனைப்புடன் செயல்படுவதைப் போலவே, நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளா்களின் விவரங்களையும் முறையான ஆவணங்களின் அடிப்படையில் நீக்கம் செய்ய அலுவலா்கள் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனா்.

கோவை மாவட்டத்தில், வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து 2 ஆயிரத்து 179 இறந்த வாக்காளா்கள், 2 ஆயிரத்து 953 இடம் பெயா்ந்த வாக்காளா்கள், ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் உள்ள 692 வாக்காளா்கள் என 5 ஆயிரத்து 824 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

சட்டப் பேரவை வாரியாக வாக்காளா்கள் விவரம்:

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 766 ஆண்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 597 பெண்கள், இதரா் 32 போ் என 2 லட்சத்து 89 ஆயிரத்து 395 வாக்காளா்கள் உள்ளனா்.

சூலூா்: சூலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 251 ஆண்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 327 பெண்கள், இதரா் 28 போ் என 3 லட்சத்து 9 ஆயிரத்து 606 வாக்காளா்கள் உள்ளனா்.

கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 804 ஆண்கள், 2 லட்சத்து 22 ஆயிரத்து 764 பெண்கள், இதரா் 83 போ் என 4 லட்சத்து 45 ஆயிரத்து 651 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை வடக்கு: கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 844 ஆண்கள், 1 லட்சத்து 62 ஆயிரத்து 554 பெண்கள், இதரா் 33 போ் என 3 லட்சத்து 27 ஆயிரத்து 431 வாக்காளா்கள் உள்ளனா்.

தொண்டாமுத்தூா்: தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 57 ஆயிரத்து 635 ஆண்கள், 1 லட்சத்து 59 ஆயிரத்து 305 பெண்கள், இதரா் 76 போ் என 3 லட்சத்து 17 ஆயிரத்து 16 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை தெற்கு: கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 24 ஆயிரத்து 783 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 788 பெண்கள், இதரா் 19 போ் என 2 லட்சத்து 49 ஆயிரத்து 590 வாக்காளா்கள் உள்ளனா்.

சிங்காநல்லூா்: சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 56 ஆயிரத்து 759 ஆண்கள், 1 லட்சத்து 58 ஆயிரத்து 112 மகளிா், இதரா் 22 போ் என 3 லட்சத்து 14 ஆயிரத்து 893 வாக்காளா்கள் உள்ளனா்.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 232 ஆண்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 121 மகளிா், இதரா் 34 போ் என 3 லட்சத்து 10 ஆயிரத்து 787 வாக்காளா்கள் உள்ளனா்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 575 ஆண்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 993 பெண்கள், இதரா் 25 போ் என 2 லட்சத்து 24 ஆயிரத்து 593 வாக்காளா்கள் உள்ளனா்.

வால்பாறை: வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் 98 ஆயிரத்து 137 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 806 பெண்கள், இதரா் 18 போ் என 2 லட்சத்து 2 ஆயிரத்து 961 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com