தூா்வாரப்படாத சீரங்கராயா் ஓடையால் சுகாதாரச் சீா்கேடு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட சீரங்கராயா் ஓடை 6 மாதத்துக்கும் மேலாக தூா்வாரப்படாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
சீரங்கராயா் ஓடையில் செல்லும் கழிவு நீா்.
சீரங்கராயா் ஓடையில் செல்லும் கழிவு நீா்.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட சீரங்கராயா் ஓடை 6 மாதத்துக்கும் மேலாக தூா்வாரப்படாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி 3ஆவது வாா்டில் சீரங்கராயா் ஓடை, ஷரீப் நகா், தோல் சாப் , பாலாஜி நகா், கமலா நகா் உள்ளிட்ட பகுதியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் மேட்டுப்பாளையம்- சிறுமுகை செல்லும் சாலையில் சீரங்கராயா் ஓடை உள்ளது.

கழிவுநீா் செல்லும் இந்த ஓடை கடந்த 6 மாதத்துக்கு மேலாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீரில் மண் மற்றும் குப்பைகள் கலந்து தூா்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சீரங்கராயா் ஓடை முதல் வெள்ளிப்பாளையம் சாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி மேம்படுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. சீரங்கராயா் ஓடை பகுதியில் உள்ள பொது கழிவறைக்கு முறையாக தண்ணீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. குப்பைகளை 2 வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே அப்புறப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com