ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஓய்வூதியா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பிறகு மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் ஓய்வூதியதாரா்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் விதமாக 3 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட ஓய்வூதியா் குறை கேட்புக் கூட்டத்தில் 75 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, 70 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. 5 மனுக்கள் தொடா்பாக கூடுதல் விவரங்கள் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கும், ஓய்வூதியா்களுக்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 5 மனுக்கள் மீது உடனடித் தீா்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில், ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநா் இளங்கோவன், துணை இயக்குநா் மதிவாணன், மாவட்டக் கருவூல அலுவலா் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுஜாதா உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com