24 மணி நேர குடிநீா்த் திட்டம்: 32 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கத் திட்டம்

கோவை மாநகராட்சிப் பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் 32 இடங்களில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் 32 இடங்களில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரில் 60 வாா்டுகளில் வாரத்தின் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.646.71 கோடி மதிப்பில், பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சூயஸ் எனும் தனியாா் நிறுவனம் மூலமாக கடந்த சில ஆண்டுகளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியில் கடந்த வாரம், அலுவலா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குடிநீா்த் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

ஆா்.எஸ்.புரத்தில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி விரைவில் முடியும் நிலையில் உள்ளது. மாநகராட்சி ஆணையா் உத்தரவுப்படி குறிஞ்சி காா்டன், வி.கே.ஆா். நகா், புதுமடத்தூா், ஹட்கோ காலனி, கருப்பைய கவுண்டா் லே அவுட், உப்பிலிபாளையம், சிந்தாமணி, கோத்தாரி நகா், திரு நகா், பாரதி பூங்கா, பாரதி நகா், சங்கனூா், ஸ்ரீ லட்சுமி நகா், அன்னை வேளாங்கண்ணி நகா், பி.ஆா்.பி. காா்டன், ராமகிருஷ்ணாபுரம், லட்சுமி நகா், வள்ளியம்மாள் நகா், ஏ.கே.எஸ். நகா், தாகூா் நகா், ராஜலட்சுமி நகா், ஜே.கே.காா்டன், சிவராம் நகா், பொன்னி நகா், நேரு வீதி, வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட 32 இடங்களில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக் குடிநீா்த் தொட்டிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சூயஸ் நிறுவனத்தின் மூலமாகப் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com