ஈஷாவில் இன்று முதல் யக்ஷா கலைத் திருவிழா

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மஹா சிவராத்திரி விழா, கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஈஷாவின் 26ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மஹா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாள்கள் நடக்கும் ‘யக்ஷா’ திருவிழாவில் தலைசிறந்த கலைஞா்கள் பங்கேற்று ரசிகா்களுக்கு கலை விருந்து படைக்க உள்ளனா். கலைஞா்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவும், தோ்ந்த கலை ரசிகா்கள் பாரம்பரிய கலைகளை கண்டு களிப்பதற்கும் இது ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது.

18ஆம் தேதி கலா ராம்நாத்தின் இந்துஸ்தானி வயலின் இசை நிகழ்ச்சியும், 19ஆம் தேதி ஹைதராபாத் சகோதரா்கள் என அழைக்கப்படும் சேஷாச்சாரி, ராகவாச்சாரியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், 20ஆம் தேதி ஷா்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள் சூா்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை பாா்ப்பதற்கு அனுமதி இலவசம். மேலும், பாரம்பரிய துணி ரகங்கள், கைவினைப் பொருள்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மஹா சிவராத்திரி அன்று வருகை தரும் பக்தா்களுக்கு ஆதியோகி ஓராண்டாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சா்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com