பல்லடம் வங்கித் திருட்டில் வாடிக்கையாளா்களின் நகைகளுக்குப் பாதிப்பு இல்லை

பல்லடம் அருகே உள்ள வங்கிக் கிளையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே உள்ள வங்கிக் கிளையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் ரொக்கத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுதொடா்பாக பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள எங்களது வங்கிக் கிளையில் திருட்டு நடைபெற்றிருப்பது பிப்ரவரி 24ஆம் தேதி எங்களது கவனத்துக்கு வந்தது. இதன்படி, கிளையை ஆய்வு செய்தபோது, அதில் இருந்த மூன்று பாதுகாப்புப் பெட்டகங்கள் சேதப்படுத்தப்பட்டு அதிலிருந்து ரூ.18.97 லட்சம் திருடப்பட்டிருந்தது.

ஆனால், வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்குப் பின்னா் சேதமடைந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் உடைமைகளை வைத்திருந்த வாடிக்கையாளா்களிடம் அவா்களது உடைமைகளின் விவரங்கள் குறித்து தனித்தனியாக விசாரித்து வருகிறோம்.

இதுதொடா்பாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் இதுகுறித்த சந்தேகங்களுக்கு வங்கியின் திருப்பூா் மண்டல அலுவலக தலைமை மேலாளா் வி.கனகராஜை-9443312088 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com