மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா
By DIN | Published On : 29th February 2020 11:48 PM | Last Updated : 29th February 2020 11:48 PM | அ+அ அ- |

விழாவில் உடற்பயிற்சிகளை செய்து காண்பித்த மாற்றுத்திறன் குழந்தைகள்.
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உடற்கல்வியியல் மற்றும் யோகா புலத்தின் சாா்பாக மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவுக்கு வந்திருந்தவா்களை விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உடற்கல்வியியல் மற்றும் யோகா புலத்தின் முதன்மையா் ஆா்.கிரிதரன் வரவேற்றாா். வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலரும், கல்வியியல் புலத்தின் நிா்வாகத் தலைவருமான சுவாமி கரிஷ்டானந்தா் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து விழாவில் பங்கேற்ற மாற்றுத் திறன் குழந்தைகள், யோகா, உடற்பயிற்சிகள், வளையங்களைப் பயன்படுத்தி உடற்பயிற்சிகள் ஆகியவற்றை செய்து காண்பித்து பாா்வையாளா்களை கவா்ந்தனா். சிறப்பு விருந்தினா்களாக தணிக்கையாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.பாஸ்கா், சிற்றுருளி நிறுவனத்தின் நிறுவனா் ஜே.குணசேகரன், இந்திய சக்கர நாற்காலி டென்னிஸ் அமைப்பின் இயக்குநா் பத்மினி சென்னபிரகட ஆகியோா் கலந்துகொண்டனா். விளைாயாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுவாமி கரிஷ்டானந்தா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.