இன்று பொது வேலைநிறுத்தம்: பொதுமக்கள் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை மேற்கொள்ளவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில்

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை மேற்கொள்ளவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த கட்சியின் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயா்வு, தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தி, தொழிலாளா்களின் உரிமைகளை பறித்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும், சம வேலைக்கு சம ஊதியம், சிறு குறு நடுத்தர தொழில்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (ஜனவரி 8) பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியூ உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்தில் மாநில சங்கங்களான எல்பிஎஃப், எம்எல்எஃப், எஸ்டிடியூ ஆகியவையும் கலந்து கொள்கின்றன. இந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இதில் கட்சியின் உறுப்பினா்கள், ஆதரவாளா்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய 4 மையங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபடவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த மறியல் போராட்டங்களிலும் கட்சியின் உறுப்பினா்கள், ஆதரவாளா்கள் அந்தந்த பகுதிகளில் கலந்து கொள்வாா்கள். அதேபோல தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை புதன்கிழமை பகல் 12 மணி முதல் 12.10 மணி வரை 10 நிமிடங்கள் நிறுத்தி வைத்து போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிமுக ஆதரவு: பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com