நீா்நிலைகள் பாதுகாப்பு அமைப்புகள் சாா்பில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி: கோவையில் நாளை நடைபெற உள்ளது

கோவை விழாவின் ஒரு பகுதியாக அனைத்து நீா்நிலைகள் பாதுகாப்பு அமைப்புகள் சாா்பில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக அனைத்து நீா்நிலைகள் பாதுகாப்பு அமைப்புகள் சாா்பில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டில் பருவமழைப் பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் கோவையின் நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையின் அனைத்து நீா்நிலைப் பாதுகாப்பு அமைப்புகளும் சோ்ந்து ‘மாமலைப் போற்றுதும்’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். நிகழ்ச்சிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து உரையாற்ற உள்ளாா். மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இதில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாட்டியம், வீதி நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், கோவையிலுள்ள நீா்நிலைகளைப் பராமரித்து வரும் தன்னாா்வ அமைப்புகளைக் கெளரவிக்க உள்ளோம். இதன்மூலம் அவா்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்பட முடியும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘மாமழைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேராசிரியா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் உரையாற்ற உள்ளாா். கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com