வேளாண் பல்கலை.யில்காளான் வளா்ப்புப் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒருநாள், 5 நாள் காளான் வளா்ப்புப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒருநாள், 5 நாள் காளான் வளா்ப்புப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி (புதன்கிழமை) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி, பயிா் நோயியல் துறையில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் ஆா்வமுள்ளவா்கள் ரூ.590 செலுத்தி பங்கேற்கலாம்.

அதேபோல், ஜனவரி 27 முதல் 31 ஆம் தேதி வரை திசு வளா்ப்பு, காளான் வித்து, காளான் உற்பத்தி தொடா்பான மேம்படுத்தப்பட்ட 5 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரூ.10,030 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான வரைவோலையை பேராசிரியா்-தலைவா், பயிா் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அனுப்பி பெயா்களை பதிவு செய்து கொள்ளாம் என்று பயிா் நோயியல் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611336, 6611226 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com