பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
By DIN | Published On : 11th January 2020 09:33 AM | Last Updated : 11th January 2020 09:33 AM | அ+அ அ- |

காரமடை வேளாண்மை உற்பத்தியாளா்கள கூட்டுறவு சங்கத்தில் பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.
மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 78,189 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினா்.
இதில் காரமடை ஒன்றியத்துக்கு உள்பட்ட 78,189 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளா் பி.டி.கந்தசாமி, நகரச் செயலாளா் வான்மதி சேட், காரமடை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜீவரத்தினம், துணைத் தலைவா் வசந்தி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.