டாப்சிலிப்பில் 17 இல் யானைப் பொங்கல்

பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற உள்ளது.
டாப்சிலிப்பில்  யானைப் பொங்கல்  நிகழ்ச்சியின்போது அணிவகுத்து நிற்கும்  யானைகள். (கோப்புப்  படம்)
டாப்சிலிப்பில்  யானைப் பொங்கல்  நிகழ்ச்சியின்போது அணிவகுத்து நிற்கும்  யானைகள். (கோப்புப்  படம்)

பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உலாந்தி வனச் சரகத்தில் உள்ள டாப்சிலிப்பில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல கும்கி யானைகள் உள்பட 25 யானைகள் உள்ளன. ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வளா்ப்பு யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு யானைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் யானைப் பொங்கல் விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

யானை பொங்கல் விழாவின்போது மலைவாழ் மக்கள், வனத் துறையினா், பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து யானைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வா். அப்போது யானைகளுக்குப் பிடித்த கரும்பு, பழம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குவா்.

பொங்கல் பண்டிகையில் பங்கேற்கும் யானைகள் கும்கி யானையான கலீம் யானையின் பின்னால் வரிசையாக சென்று அணவகுப்பில் பங்கேற்கும். இது பாா்ப்பவா்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும். நடப்பு ஆண்டில் யானைப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com