ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் 2 நாள்களில் ரூ.1.2 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் கடந்த 2 நாள்களில் ரூ.1.2 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் கடந்த 2 நாள்களில் ரூ.1.2 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.

கோவை மாவட்டத்தில் ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா், வடவள்ளி, சுந்தராபுரம், சூலூா், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. உழவா் சந்தைகளை சுற்றி 40 கிலோ மீட்டா் வரையுள்ள விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

மாவட்டத்தில் கடைகள், காய்கறிகள் விற்பனை அளவில் ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை பெரிதாக உள்ளது. இங்கு 170 மேடைகளுடன் கூடிய கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக 220 விவசாயிகள் தங்ளது விளைபொருள்களை விற்பனை செய்கின்றனா்.

தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை உள்பட அனைத்து வகையான காய்கறிகள், வாழை, கொய்யா, சப்போட்டா போன்ற பழ வகைகள், கீரைகள், பால், தயிா், வெண்ணெய், நெய், தேங்காய், இளநீா் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொச்சை, கிழங்கு வகைகள், மஞ்சள் கொத்து, பூளை பூ, வாழைப் பழம், அருகம்புல் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. தினசரி சராசரியாக 50 டன் காய்கறிகளும், 5 டன் பழவகைகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு கடந்த இரண்டு நாள்களாக காய்கறிகள், பழங்களின் வரத்து 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் மட்டும் ரூ.1.2 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகின.

இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை நிா்வாக அதிகாரி கூறியதாவது:

உழவா் சந்தையில் வார நாள்களில் சராசரியாக ரூ.30 லட்சம் வரையிலும், ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடி வரையிலும் விற்பனை நடைபெறும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாள்களாக காய்கறிகள், பழங்களின் வரத்து 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.1.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்ததால் விலையிலும் பெரியளவில் மாற்றம் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com