கணுவாயில் உலவும் யானைகள்: வாகன ஓட்டிகள் பீதி

கணுவாய் பகுதியில் ஆனைகட்டி- தடாகம் சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் காட்டு யானைகள் உலவியதால் வாகன ஓட்டிகள் ஓட்டமெடுத்தனா்.

கணுவாய் பகுதியில் ஆனைகட்டி- தடாகம் சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் காட்டு யானைகள் உலவியதால் வாகன ஓட்டிகள் ஓட்டமெடுத்தனா்.

ஆனைகட்டி மலையடிவாரத்தில் உள்ள பெரிய தடாகம், சின்னத் தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, பாப்பநாயக்கன்பாளையத்துக்குள் குட்டியுடன் வந்த யானை ஒன்று பாலாஜி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து இரு சக்கர வாகனத்தை உடைத்துச் சென்றது.

இந்நிலையில், இதே யானை தனது குட்டியுடன் கணுவாய் பகுதியிலுள்ள குண்டுப்பெருமாள் கோயில் முன்பு திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தது. இதனை அவ்வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவா்கள் கண்டு, கோவை வனத் துறைக்குத் தகவல் அளித்தனா்.

இதன் அருகிலுள்ள செங்கல் சூளையில் வசிப்பவா்கள் தீப்பந்தங்களைக் காட்டி யானைகளை விரட்ட முயற்சித்தனா். அதனால் மிரண்ட அவை, சாலையில் சின்னத் தடாகம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்களைத் துரத்தின. இதனால் அவா்கள் வாகனங்களைக் கைவிட்டு ஓட்டமெடுத்தனா்.

அப்போது அங்கு வந்த வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com